2025 மே 26, திங்கட்கிழமை

மட்டு. மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்விப் பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்

Suganthini Ratnam   / 2017 மே 09 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்விப் பாடத்துக்கு 17 ஆசிரியர்களுக்கான  வெற்றிடங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை (8) மாலை நடைபெற்றது. இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள எந்தவொரு கோட்டத்திலும் 400 மீற்றர் அளவுள்ள விளையாட்டு மைதானம் இல்லை என்பதுடன், இந்த வலயத்தில் போதியளவான விளையாட்டு உபகரணங்கள் இன்மையால், ஏனைய வலயங்களிடமிருந்து விளையாட்டு உபகரணங்களைக் கடனாகப் பெற்று போட்டிகளை நடத்துகின்றோம்.

எமது வலயத்திலுள்ள மாணவர்கள் விளையாட்டில் உள்ளார்ந்த திறமையைக் கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுக்க  முடியாத நிலைமை காணப்படுகின்றது.

மேலும், எமது வலயத்தில் விளையாட்டுப் பாடசாலை என்று எந்தவொரு பாடசாலையும் உருவாக்கப்படவில்லை' என்றார்.   


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X