2025 மே 14, புதன்கிழமை

மட்டு.வில் 333 இலட்சத்து 74 ஆயிரத்து 611 ரூபாய் நட்டஈடு

Administrator   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடம் 333 இலட்சத்து 74 ஆயிரத்து 611 ரூபாய் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் காப்புறுதி சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் காப்புறுதி சபையின் ஓகஸ்ட் மாதம் வரை 2047 பேர்  நெற்பயிர் காப்புறுதி செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 66 இலட்சத்து 18ஆயிரத்து 715 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.அதன்படி 1609 விவசாயிகள் முன்வைத்த நட்டஈட்டுக் கோரிக்கைகளின் அடிப்படையில் 333 இலட்சத்து 74 ஆயிரத்து 611 ரூபாய் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கெத்தட்ட அருண நெற் காப்புறுதி திட்டத்தில் 29304 விவசாயிகள் காப்புறுதி செய்துள்ளனர்.இவர்களிடமிருந்து 306 இலட்சத்து 71381 ரூபாய் கட்டுப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இவர்களில் 23417 பேர் நட்டஈட்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நட்ட ஈடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், விவசாயிகளுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8148பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இவர்களில் 861பேர் ஓய்வூரியத்துக்குத் தகுதி பெற்று தற்போது மாதாந்தம் 12 லட்சத்து 25170 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X