2025 மே 07, புதன்கிழமை

மட்டு. வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் அரச திணைக்களங்களில் வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகர மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லாட்சியில் தங்களுக்கு வேலை வழங்கப்படவேண்டும் என்றும் மாவட்டத்தில் இதுவரையில் 1,272 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும் அதில் 40 வயதை தாண்டியவர்களும் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தெரிவித்தார்.

மேலும்,இதற்கு முன்பு நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தில் எந்தவித நன்மையும் ஏற்படவில்லை. இந்நிலை தொடருமானால் தொடர்ச்சியாக சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்வோம்.

இதுபற்றிய விபரங்கள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X