Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகத்தான் காணப்படுகின்றார்கள். சமூக பொருளாதாரத்தில், இனரீதியிலும் பிரதேச ரீதியிலும் பல விடையங்களில் எமது மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள், தலைவருமாகிய காலஞ் சென்ற சி.மு.இராசமாணிக்கத்தின், நினைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'இராசமானிக்கம் மக்கள் அமைப்பு' எனும் மக்கள் தொண்டு நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (13) களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி, கலை மற்றும் பண்பாடு போன்ற பல விடையங்களில் பின்னோக்கியுள்ள இந்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கடந்த கால யுத்த வடுக்களைச் சுமந்தவர்களாக, யுத்தம் மற்றும், சுனாமி, போன்ற கோர அனர்த்தங்களின் வலியைச் சுமந்தவர்களாக எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையிலும்கூட அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்குகள் காரணமாக மக்கள் இன்னும் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். மக்களின் காலடிக்குச் சேவைகளைக் கொண்டு செல்வதில் அரச அதிகரிகள் தயக்கம் காட்டுகின்றார்கள்.
2000 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை வருடாந்தம் மாவட்ட அபிவிருத்திகளுக்குச் செலவு செய்கின்றார்கள். ஆனால், மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் இல்லாமலுள்ளன. உரிய திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அரச செயற்பாடுகள் உரிய முறையில் நேர்தியாக இயங்கினால் மக்களுக்கு சேவை செய்வதங்கு அறக்கட்டறை அமைப்புக்கள் தேவைப்படாது.
ஆனால், தற்போதைய நிலையில், மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தனியார் அமைப்புக்களும் அறக்கட்டளைகளும், அரச சார்பற்ற அமைப்புக்களினதும் சேவைகள் இன்றியமையாததாகவுள்ளன.
எனவே, இப்பிரதேச மக்களின் வலியை அறிந்து தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சி.மு.இராசமாணக்கத்தின் பெயரால் அவரது பிள்ளைகள் ஆரம்பித்துள்ள 'இராசமானிக்கம் மக்கள் அமைப்பின் நோக்கம் நிறைவேற வேண்டும். அவர்களது சேவை மட்டக்களப்பு மாவட்ட அடிமட்ட ஏழை மக்களுக்குப் போய் சேரவேண்டுமென அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago