2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 306 அபிருத்தித் திட்டங்கள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 297 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 306 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 297 கிராம அலுவலர் பிரிவுகளிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் 185 திட்டங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் 298 வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களும்  02 நீர்விநியோகத் திட்டங்களும் ஏனைய உட்கட்டமைப்பு, வடிகாலமைப்பு வேலைத்திட்டங்கள் 06உம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் 486.76 கிலோமீற்றர் வீதிகள் 37 கல்வெட்டுகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, கிராமப்புறங்களில்  குடிநீர்த் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக  02  குடிநீர்க் கிணறுகள்; அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள  மக்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X