2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பிற்கு நலிந்த விஜயம்

Janu   / 2025 ஜூலை 20 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் வெள்ளிக்கிழமை (18) அன்று விஜயம் ஒன்றினை  மேற்கொண்டிருந்தார்.

மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் வைத்திய உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இதன் போது  வைத்தியசாலைகளில் வழங்கப்படும்  சேவைகள்  மற்றும்  மாவட்டத்தில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையினால் நோயாளர்கள்  தமது சிகிச்சையினை பெற்றுக்கொள்வதில்  உள்ள பிரச்சினைகள் தொடர்பான தெளிவூட்டல்களை பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் அறிக்கையின் மூலம் விளக்கங்கள் வழங்கியதுடன் மாவட்டத்தில் காணப்படும் சுகாதார சேவைக்குரிய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தை அமைத்தல், வைத்தியசாலைகளை தரம் உயர்த்துதல் மற்றும் வாகனங்கள், போக்குவரத்து பிரச்சினை  போன்ற பல விடயங்களை இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவை அமைச்சின் செயலாளர் திசாநாயக்க கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள் , சுகாதார வைத்திய அதிகரிகள் என பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது அமைச்சருக்கு பிராந்திய சுகாதார  பணிப்பாளரினால்  நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்

எதிர்வரும் பாதிட்டில் அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அர்பணிப்புடன் செயற்படுவதுடன் மாவட்டத்திலிருந்து  முன்வைக்கப்படும் கோரிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதை சுட்டிக்காட்டியதுடன் வைத்திய சேவைகளை  நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன் எடுப்பதாக இதன் போது கூறினார்.

 இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் எதிர்வரும் பாதிட்டில் அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அர்பணிப்புடன் செயற்படுவதுடன் மாவட்டத்திலிருந்து  முன்வைக்கப்படும் கோரிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதை சுட்டிக்காட்டியதுடன் வைத்திய சேவைகளை  நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன் எடுப்பதாகவும் தெரிவித்தார். 

எம். எஸ். எம். நூர்தீன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .