2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பிலும் டெங்கு அபாயம்

Editorial   / 2022 ஜனவரி 12 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

 மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் டெங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிறுவர்கள், பெண்கள் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகும் நிலை அதிகரித்து வருவதாகவும் இது இன்னுமோர் அபாயகரமான சூழலை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடகீழ் பருவபெயர்ச்சி மழையின் பின்னர் கொரோனா முடக்க நிலையிலிருந்து வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், டெங்கின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த டிசெம்பர் மாதம் 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். 2022ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே 06 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையானது எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .