Freelancer / 2022 மே 01 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
தொழிலாளர் தினத்தில், தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே இன்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு கிளையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது, விலைவாசியை குறைக்குமாறும், நாட்டை விற்க வேண்டாம் எனவும், ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறும், உரம் வழங்காமையினால் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் பஞ்சத்தில் வாடுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், சுலோபங்கள் எழுதப்பட்ட வாசகங்களையும், பால்மா, எரிவாயு உள்ளிட்ட படங்களையும் கையில் ஏந்தி இருந்தனர். (R)
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025