2025 மே 17, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 2,840 பேர் பாதிப்பு

Editorial   / 2018 மே 27 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், 2,840 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 பேர் உயிரிழந்துள்ளதாக,  பிராந்திய தொற்று நோயியலாளர் டொக்டர்  தர்ஷினி காந்தரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்   அதிகளவில் டெங்கு பரவிவருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் இன்று (27) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் விசேட கலந்துறையாடலொன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“14 சுகாதார வைத்திய  அதிகாரி  அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி, ஓட்டமாவடி, கோரளைப்பற்று, களுவாஞ்சிக்குடி போன்ற பகுதிகளில், அதிகளவில் டெங்கு நோயாளர்கள்  இணங்காணப்பட்டுள்ளனர்.

“ஜனவரி மாதத்தில் 598 நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்  பெப்ரவரியில் 496 பேரும் மார்ச் மாத்தில் 548 பேரும் 577 பேர் ஏப்ரல் மாதத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மே மாதம் 626 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

“அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து திணைக்களங்களும் முன்வர வேண்டும். அரச திணைக்களங்களின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டள்களை நடாத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .