2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இலகு கடன் திட்டம்

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில், ஜனாதிபதியின் சிந்தனைக்கு  அமைவாக,  பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ்,  நாடளாவிய ரீதியில் மக்கள் வங்கியின் ஊடாக “நிறைவான எதிர்பார்ப்பு  தன்னிறைவான தேசம்”  என்ற தொனிப்பொருளில், கடன் உதவிகள் வழங்கப்பட்டு, விவசாயம், மீன்பிடி, பெண்கள் தலைமை  தாங்கு குடும்பப் பெண்களின்  சுயதொழில்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இந்த இலகு  கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு  செயலமர்வு, மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச  செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது.

மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச  செயலாளர் சத்தியானந்தி நமச்சிவாயம்  தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு செயலமர்வில், மட்டக்களப்பு பிராந்திய  மக்கள் வங்கி  உதவிப் பிராந்திய முகாமையாளர் எம்.மோகனதாஸ், காத்தான்குடி மக்கள் வங்கி  உதவி முகாமையாளர் என்.உமாஜினி உட்பட மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பயனாளிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .