Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 மே 03 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று இல்லை என்றும் தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட 62 பேருக்கு தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய கலாநிதி எம்.அச்சுதன் தெரிவித்தார்.
சுகாதார பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் எதுவித கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாதவாறு தடுப்பு நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
“உலகளாவிய ரீதியில் கொவிட்19 வைரஸ் தாக்கம் அதிகரித்துவருகின்ற நிலையில், இலங்கையில் இந்தத் வைரஸ் தடுப்பு நடவடிக்கை, ஜனாதிபதி தலைமையில் தேசிய மட்டத்தில் செயலணி உருவாக்கப்பட்டு, இதற்கு தேவையான மிகவும் காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டு, எங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. அவற்றை மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரத் திணைக்களம் உன்னிப்பாக நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
2 hours ago
3 hours ago