2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் கிருமித் தொற்று நீக்கம்

Princiya Dixci   / 2021 மே 17 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகர் பகுதியில் கிருமி தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள், நேற்று (16) முன்னெடுக்கப்பட்டன.

3 நாள்களின் பின்னர் இன்றையதினம் மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், மட்டக்களப்பு பிரதான சந்தை பிரதான பஸ்தரிப்பு நிலையம்,  காந்தி பூங்கா மற்றும் பிரதான வீதிகளில் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையை, மட்டக்களப்பு மாநகர சபையினர்  கிழக்கின் சிறகுகள் அமைப்பினர், இராணுவத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து முனனெடுத்திருந்தனர்.

231ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி, மாநகர ஆணையாளர் எம். தயாபரன்,  பொதுச் சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ், தீயணைப்பு படை பொறுப்திகாரி வி. பிரதீபன் உட்பட  பொலிஸ் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X