2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் தொற்று நீக்கும் பணிகள் மும்முரம்

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரம் உட்பட பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் பகுதிகளில் தொற்று நீக்கும் பணிகள், மட்டக்களப்பு மாநகர சபையால் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் கலகத் தடுப்பு தண்ணீர் பாய்ச்சும் வாகனத்தின் உதவியுடன் இந்தத் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவனின் நேரடி வழிநடத்தலின் கீழ், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் வீதிகளும் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம், பிரதான தனியார் பஸ் நிலையம், பொதுச்சந்தை என பொதுமக்கள் செறிவாக வாழும் அனைத்துப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளின் மாநகரசபை ஊழியர்கள், பொலிஸார், இளைஞர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X