2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் நான்கு நாள்களில் 35 பேர் கைதாகினர்

Editorial   / 2020 ஜூலை 15 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவட்ட மதுவரித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, 04 தினங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பெருமளவு போதைப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என,  மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தால், சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில், இம்மாதம் 6ஆம், 11ஆம், திகதிகளிலும் 13ஆம், 14ஆம் திகதிகளிலும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, மதுவரித்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் இந்த முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டன.

கசிப்பு உற்பத்தி மேற்கொண்டது தொடர்பில் மூவரும் கசிப்பு வைத்திருந்த 23 பேரும், கசிப்பு உற்பத்திக்கான கோடாவை வைத்திருந்த இருவரும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவரும் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட 03 பேரும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் வைத்திருந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .