Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2018 மே 29 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
நாட்டில், புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், “எமது தலைமுறை கட்சி” என்ற பெயரில் புதியதொரு கட்சி, மட்டக்களப்பு, கொம்மாதுறையில் இன்று(29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, கொம்மாதுறை நிருத்தியா விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, கட்சியின் நோக்கம், கொள்கைகள் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
சிதம்பரம் கருணாநிதி என்பவரைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கட்சியின் பொதுச் செயலாளராக தயாளன் அல்போன்ஸ், பொருளாளராக வேலுப்பிள்ளை சுமங்களா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தமது கட்சியின் கொள்கை விளக்கத்தை வெளியிட்ட தலைவர் கருணாநிதி கூறியதாவது,
வடக்கு - கிழக்கு இணைக்க வேண்டும் என்பது அறிவீனமான வாதம். ஏனென்றால், வடக்கு - கிழக்கில் இரண்டு முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை, இந்த இணைப்புக் கோரிக்கை இல்லாமலாக்கிவிடும் எனத் தெரிவித்தார்.
தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பிரதிநிதிகள், தாம் சுகபோகங்களை அனுபவிக்கிறார்களே தவிர, மக்களுக்காக எதனையும் சாதிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், இதனை அறிந்து, தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு 'எமது தலைமுறைக் கட்சி' என்ற பெயரில், புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இன, மத, சாதி, மொழி, பிரதேச, பால் ரீதியான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் ஓரங்கட்டல்களையும் களைந்து, நேசம் மிக்க தேசத்தின் புதல்வர்களாக, புதல்விகளாக, அமைதியும் அபிவிருத்தியும் மிக்க இலக்கை நோக்கிச் செல்வதே இக்கட்சியின் குறிக்கோளாகும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், இக்கட்சியில் பதவி வகிப்போரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு எவ்விதத்திலும் எவ்விதமான பதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த அவர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், எக்காரணம் கொண்டும் குடும்ப அங்கத்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago