2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் முதன்முறையாக காரில் ’ஐஸ்’ போதைப்பொருள்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதன்தடவையாக “ஐஸ்” எனப்படும் புதிய ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பொடி பண்டார தெரிவித்தார்.

பாசிக்குடா ஹோட்டல் ஒன்றிலிருந்து நவீன கார் ஒன்றில், குறித்த ஐஸ் போதைப்பொருளைக் கடத்திவந்த நிலையில், காத்தான்குடி, குட்வின சந்தியில் வைத்து, மூன்று இளைஞர்களை, இன்று (30) காலை கைதுசெய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், மட்டக்களப்பையும் பாசிக்குடாவையும் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசுக் காரும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரையும், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .