Niroshini / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. சரவணன்
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வர்தக நிலையங்களை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், வீதிகளில் அநாவசியமாக சுற்றி திரிந்தவர்களை பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டனர்.
இந்தச் செயற்பாடு, இன்று (29) மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
மண்முணை வடக்கு பிரதேச செயலக கொரோனா செயலணி கூட்டம் நேற்று (28) நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஊரடங்கு தனிமைபடுத்தல் சட்டத்தை மீறி வீதிகளில்; பொதுமக்கள் அநாவசியமாக நடமாடுவதாகவும் பல வர்த்தக நிலையங்கள்; திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, சட்டத்தை மீறி திறக்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து,இன்று(29) காலை 10 மணிக்கு, சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸார் மற்றும் மாநகரசபையின் உள்ளிட்டோர், ஊறணி, கூளாவடி, பார்வீதி, கொக்குவில் ஆகிய பிரதேசங்களில் விசேட ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் போது, வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரத்தில் ஈடுபட் வர்த்தகர்களை எச்சரித்து, கடைகளைப் பூட்ட வைத்தனர். அதேதேவேளை, வீதிகளில் மோட்டார் சைக்கிளில் அநாவசியமாக சுற்றி திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர்.
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago