2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் விசேட வீதிச் சோதனை

Princiya Dixci   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பிலுள்ள 14 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள பிரதேசங்களில்  விசேட வீதிச் சோனை நடவடிக்கை, பொலிஸார் இன்று (07) முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இந்த விசேட வீதிச் சோதனை நடவடிக்கை, இன்று காலை 6 மணிமுதல் 14 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள பிரதான வீதிகள், முக்கிய சந்திகள் மற்றும் சந்தைப் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் நடமாடும் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் கார், மோட்டர் சைக்கிள்கள் என வாகனங்களில் பயணித்தவர்களும் நிறுத்தி கடும் சோதனையிடப்பட்டனர்.

அதேவேளை, மாவட்டத்தில் இன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X