2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’மட்டக்களப்பில் ’விபத்துகள் குறைவு’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏனைய மாவட்டங்களை விட, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகன விபத்துகள் குறைவாகும் என  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பரிசோதகர் ஏ.எல்.எம்.இக்பால் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில்; போக்குவரத்துப் பொலிஸாரால் அமுல்படுத்தப்படும் போக்குவரத்துச் சட்ட ஒழுங்குகளே இங்கு விபத்துகள் குறைவடைவதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.

சாரதிப் போதனாசிரியர்களை தெரிவுசெய்வதற்காக நடைபெறவுள்ள பரீட்சைக்குத் தோற்றவுள்ளோருக்கான செயலமர்வு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனை வடக்குப்  பிரதேச செயலகத்தில் இன்று (18)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'அதிகளவான விபத்துகளுக்கு மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதே காரணமாக அமைகின்றது. 80 சதவீதமான வாகன விபத்துகள், மதுபோதையில் வாகனம் செலுத்துவதாலேயே இடம்பெறுகின்றது' என்றார்.

'பொதுமக்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்து முகாமைத்துவத்தை பேணி நடக்க வேண்டும் என்பதுடன், வீதி ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடமொன்றுக்கு 5,000 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன' என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X