2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு கொரோனா நோயாளி கொழும்புக்கு அனுப்பி வைப்பு

Editorial   / 2020 மார்ச் 18 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

பரிசோதனைகளின் பின்னர் மட்டக்களப்பில்  இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு – அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாரென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

சுமார் 61 வயது மதிக்கத்தக்க இந்த கொரோனா தொற்றாளி, 5 நாள்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்,மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (16)  சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது பரிசோதனை முடிவுகள் நேற்று (17) மாலை கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையக்கு அனுப்பி வைக்கப்பட்டாரென, பணிப்பாளர் கலாரஞ்சனி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X