Princiya Dixci / 2021 மே 20 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளானவர்களை, கொழும்பில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலையில் இருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே இவ்வாறு 44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago