Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11.3 சதவீதமாக வறுமை இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தால் நடத்தப்பட்ட சௌபாக்கிய விற்பனைக் கண்காட்சியை, பழைய கல்லடிப் பாலத்தில் நேற்று (18) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், இலங்கையைப் பொறுத்தவரைக்கும் 4.1 சதவீதமாக இருக்கின்ற வறுமை, எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் 11.3 சதவீதமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றதெனத் தெரிவித்தார்.
எனவே, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது கடமையை இன்னும் காத்திரமாக செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
வறுமையில் மிகவும் கஷ்டப்படுகின்ற பிரதேசமாக மட்டக்களப்பு பிரதேசத்தை காணக் கூடியதாக இருப்பதாகவும் இதற்கு சமுர்த்தித் திட்டத்தை சரியாகச் செயற்படுத்துவதன் ஊடாக இவ்வறுமையைக் குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார்.
நமது மாவட்டத்தில் இருக்கின்ற அபிவிருத்தியில் வருமானம் அதிகரிக்கின்ற அபிவிருத்தியாக இந்தச் சுற்றுலாத்துறையை மாற்றவேண்டும் எனவும் கல்லடிப்பாலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அதற்காகவே தாம் மேற்படி விற்பனைக் கண்காட்சியையும் கல்லடிப் பாலத்தில் நடத்தத் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
1 hours ago