2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு வாவிக்கரையில் துப்புரவுப்பணி

Editorial   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு வாவியின் கரையோரத்தை அழகுபடுத்தல் மற்றும் நகரில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, மட்டக்களப்பு பிரதம பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்களால், பாரிய சிரமதான நிகழ்வொன்று,  மட்டக்களப்பு நகரில், இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.

ஊறணிச் சந்தியிலிருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் 2 கிலோ மீற்றர் நீளமான வாவிக்கரையும்  எதிர்ப்பக்கமுள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டு, கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களில் ஏற்றப்பட்டு திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருவதால் குப்பைகள் போடப்படுவதுடன், தற்போது நிலவும் அதிக வெப்பத்தால் வாவியின் கரையோரம் பாசிகளால், நிரம்பிக் காணப்படுவதுடன், துரநாற்றமும் வீசுகிறது.

இதனால், அவற்றைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில், பிரஜா பொலிஸ் பிரிவினரும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்கர் கீர்த்தி ரத்னவின் ஆலோசனைக்கிணங்க பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர் என, பிரதம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தியால் திகாவத்துர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .