2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்புக்கு பிரதமர் ரணில் விஜயம்

Editorial   / 2019 மார்ச் 17 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மார்ச் 23ஆம் திகதியன்று, மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

விவசாய நீர்ப்பாசன மற்றும் சிறுகைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில், மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் பிரதமர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 7,000 பேருக்கு, காணி உறுதிப்பத்திரங்களை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வைத்து, அன்றைய தினம் வழங்கி வைக்கவுள்ளார்.

இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இந்த வைபவத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவட்டச் செயலாளர் மா. உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள், மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்குக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X