Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல், எம்.எஸ் எம்.நூர்தீன், எம்.ஏ.றமீஸ், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த 2, 3 தினங்களாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (13) காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணி வரையிலாக 24 மணித்தியாலத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.
இதற்கமைய, மட்டக்களப்பு நகரில் 83.1 மில்லிமீற்றரும், நவகிரியில் 105.0 மில்லிமீற்றரும், தும்பன்கேணியில் 122.0 மில்லிமீற்றரும், மைலம்பாவெளியில் 52.3 மில்லிமீற்றரும், உன்னிச்சையில் 41.0 மில்லிமீற்றரும், வாகனேரியில் 5.5 மில்லிமீற்றரும், உறுகாமத்தில் 43.6 மில்லிமீற்றரும் மழை வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி கிராமத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அப்பகுதியில் அமைந்துள்ள தோணாவை வெட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ளதால், இம்மாவட்டத்தின் அம்பாறை பிரதேசத்தில் 88.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.நஹீம் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை, ஆலையடிவேம்பு, சாகாமம், இறக்காமம், அம்பாறை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திராய்க்கேணி, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்கள் குடியிருப்புக்குள் வௌ்ள நீர் புகுந்துள்ளதால் அம்மக்கள், உறவினர்களின் இல்லங்களில் தஞ்சம்புகுந்துள்ளனர்.
தமது இருப்பிடங்களில் சுமார் மூன்றடிக்கு மேல் மழை நீர் நிரப்பியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலைக்கும் சில மக்கள் ஆளாகியுள்ளனர்.
20 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago