2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. - கல்முனை வீதியில் விபத்து; இளைஞர்கள் இருவர் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில், நேற்று (01) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸுடன் மேற்படி இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும்  ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, காளி கோவில் வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ்.டிலுக்சன், 22 வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

விபத்தையடுத்து பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

-வ.சக்தி, க.சரவணன்,  ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், நடராஜன் ஹரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .