2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு.,காத்தான்குடி நகரங்களில் கிருமி நாசினி விசிறல்

A.K.M. Ramzy   / 2021 மே 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் இராணுவத்தினர் தொடர்ச்சியான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் தடுப்பு மருந்துகளை தெளிக்கும் நடவடிக்கை களை இராணுவத்தினர் முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு,காத்தான்குடி நகரில் காத்தான்குடி நகர சபையுடன் இணைந்து கொரோனா கிருமிகளை அழிக்கும் தொற்று நீக்க தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

காத்தான்குடி நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பொதுமக்கள் கூடும் இடங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில் இராணுவ உயர் அதிகாரிகள், காத்தான்குடி நகரசபை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பங்கெடுத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X