2025 மே 14, புதன்கிழமை

மட்டு. சிறைச்சாலைக்கு வைத்தியர்களை அனுப்ப முஸ்தீபு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்களைத் தொடர்ச்சியாக அனுப்புவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச்சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் நோய்வாய்ப்படும் போது ,அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் சிறைச்சாலை நிர்வாகம் பலதரப்பட்ட சிரமங்களை எதிர்நோக்குவதால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குத் தொடர்ச்சியாக வாராந்தம் வைத்தியர் ஒருவரை அனுப்பி, அங்கு நோய்வாய்ப்படும் கைதிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பி.பிரசாந்தன் தலைமையிலான முக்கியஸ்தர்கள், ஆளுநரின் கவனத்துக்கு நேற்று (11) கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்கள் தொடர்ச்சியாக வருகை தராததால் சிறைச்சாலை நிர்வாகமும் அங்குள்ள கைதிகளும் சிரமங்களுக்குள்ளாகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய இவர்கள், வாராந்தம் அல்லது இரு நாள்களுக்கு ஒரு முறை வைத்தியர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .