2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டு. நகர் வாவிக்கரையில் சடலம் மீட்பு

கனகராசா சரவணன்   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நகர் லோயிட்ஸ் அவனியூர் வீதிக்கு முன்னாலுள்ள வாவக்கரையில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு ​(18) 7.30 மணிக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று, சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தை மீட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம், அடையாளம் காணப்படாதலால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது,

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .