2025 மே 03, சனிக்கிழமை

மட்டு.பொலிஸாரின் தலைமையில் விசேட விழிப்புணர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கொரனா அச்சுறுத்தல் தொடர்ச்சியாக இருந்துவரும் நிலையில், மக்கள் கைக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த தெளிவூட்டல்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பொலிஸாரின் ஏற்பாட்டில், விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று(20) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம்,  தனியார் பஸ் நிலையம் ஆகியவற்றில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எம்.மெண்டிஸின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்ட அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பி.பி.எஸ்.சரத்சந்திர தலைமையிலான பொலிஸ் குழுவினர், இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பாதுகாப்பு கவசம் அணிதல், பஸ்ஸினுள் இடைவெளியை பேணுதல், சாரதி, நடத்துநரின் பாதுகாப்பு, பயணிகளின் பாதுகாப்பு குறித்து, பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X