Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு, மட்டக்களப்பு 231ஆவது இராணுவப் படைப்பிரிவு மூன்றாவது தடவையாகவும் மருத்துவ உபகரண தொகுதியை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை உறவுகளால் இலங்கை இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று (05) வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கத்திடம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள 231ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான பிறிகேடியர் கேணல் டிலூப பண்டார தலைமையில் இவற்றைக் கையளித்தனர்.
மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒட்சிசன் செறிவாக்கி மற்றும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிட்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரண தொகுதிகள் இதில் உள்ளடங்கியிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago
53 minute ago
59 minute ago