Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வதியும் வசதி குறைந்த மாணவர்களின் நலன் கருதி, இலவச நீச்சல் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுள்ளனவென, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
மாநகர சபையின் விளையாட்டு அபிவிருத்தி தொடர்பில் இன்று (05) கருத்துத் தெரிவிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மாவட்டத்தில், வசதி குறைந்த பல மாணவர்கள் திறமையிருந்தும் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள் என்றார்.
இவ்விடயத்தில் எமது மாநகரசபை, விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நிலையியற் குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாகவும் அக்குழு, மாநகர எல்லைக்குள் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் மேயர் தெரிவித்தார்.
குறிப்பாக, எமது பிரதேசத்தில் நீச்சல் தாடக வீரர்களை உருவாக்கும் பொருட்டு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இலவச நீச்சல் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்காக அனுபவம் வாய்ந்த திறமையான பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணி வரை இந்த இலவச நீச்சல் பயிற்சி இடம்பெற்று வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago