Editorial / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபையின் 55ஆவது அமர்வு, வருட இறுதி அமர்வாக, சபையின் மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (29) நடைபெற்றது.
மேயரின் தலைமையுரையுடன் இன்றைய சபையின் அமர்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், நிதிக்குழு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு அதற்காக அங்கிகாரங்களும் வழங்கப்பட்டன.
கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர சபையானது ஸ்திரமற்ற நிலையில் உள்ளதன் காரணமாக, சபையின் வருமானம் வெகுவாக இழக்கப்பட்டுள்ளதாகவும் நகர சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாகாண சபை அதற்கான நிதிகளை வழங்கும்போதே சம்பங்களை வழங்கமுடியுமெனவும் மேயர் இதன்போது தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வின்போது, அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் வே.தவராஜா மற்றும் மாநகர சபையின் மேயர் தி.சரவணபவனின் தாயார் ஆகியோருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், நினைவுரைகளும் நடைபெற்றன.
34 minute ago
39 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
17 Dec 2025
17 Dec 2025