2025 மே 14, புதன்கிழமை

மட்டு. மாவட்ட உழவர் விழா

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உழவர் விழா, மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை பிரதேசத்தில் நாளை மறுதினம் (18) காலை நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் கொடியேற்றல், தேசிய கீதம், தமிழ் மொழி வாழ்த்து, மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, வரவேற்புரை நடனம், வரவேற்புரை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடலுடன் பொங்கல் விழா நடைபெறும்.

வரவேற்புரையை மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்தும் நிகழ்வுரையை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகியும் நிகழ்த்துவர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட உழவர்கள், கிராம மட்ட சமூக அமைப்புகள் இணைந்து நடத்தும் இவ் வருடத்துக்கான உழவர் விழாவில், பாரம்பரிய விளையாட்டுக்கள், கவியரங்கு, கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .