2025 மே 15, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 60,000 ஏக்கர் வயல்வெளிகள் வெள்ளத்தில் மூழ்கின

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக, இதுவரைக்கும் 60,000 ஏக்கர் நெற்செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக, மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களப் பிரதி ஆணையாளர் ந.சிவலிங்கம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 168,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அவற்றில் நீரில் மூழ்கும் சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றதாகவும் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தைப் பொறுத்தளவில் வாகரைப் பிரதேசத்திலேயே கூடுதலான வயல்வெளிகள் நீரில் முழ்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மழை, இன்னும் ஓரிரு தினங்கள் தொடர்ந்தால், மாவட்டத்திலுள்ள அனைத்து வயல் நிலங்களும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுவதுடன், அனைத்து வயல் நிலங்களையும் மீண்டும் விதைக்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அவர் கவலை தெரிவித்தார்.

இதேவேளை, குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துக் கொண்டு செல்வதை அறியக்கூடியதாக உள்ளதாகவும் இதனால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கூடுதலான பாதிப்பை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .