2025 மே 03, சனிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் கிராமசேவகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகிதநகர் கிராம சேவகர், அந்தப் பிரதேசத்துக்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவகர்களும், இன்று (20) மாலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கிராம சேவகர் தாக்குதலுக்கு உள்ளாகி நான்கு நாள்கள் கடந்துள்ள நிலையில், தாக்குதலுடன் தொடர்புடையவர் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், அதனைக் கண்டித்து, கிராமசேகவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட கிராம அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட கிராம சேவை அதிகாரி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X