2025 மே 14, புதன்கிழமை

மட்டு., வரவு – செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு, மேயர் தி.சரவணபவன் தலைமையில் நேற்று (18) நடைபெற்ற போது, 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு –செலவுத்திட்டம் தொடர்பிலும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வரவு - செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

29 உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும் 06 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 03 உறுப்பினர்கள் சபைக்குச் சமுகமளிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி , ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதவாக வாக்களித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் ஐந்து பேரும் ஈ.பி.டி.பி.உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

இதற்கமைய, 23 மேலதிக வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக, மேயர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .