Suganthini Ratnam / 2016 ஜூலை 15 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஆரையம்பதி நகரில் அமைந்துள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலக முகப்பு பெயர்ப்பலகை இனந்தெரியாதோரால் நேற்று வியாழக்கிழமை இரவு உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மண்முனைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேச செயலகம், ஆரையம்பதியில் அமைந்துள்ளதனால் மண்முனை என்ற வாசகத்தை அகற்றிவிட்டு ஆரையம்பதி என்று குறிப்பிட வேண்டும் என பிரதேச ஆதரவாளர்கள் சிலர் தொடர்ச்சியாக குறைகூறி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago