Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மேற்கு, முள்ளிவட்டவான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்களால் இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவட்டவான் ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோமான முறையில் மணல் அகழ்வதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும் வீதிகள் குன்றும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதாகவும் இப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, இவ்வாறு மணல் அகழ்வதால், வயல் நிலங்களுக்கும் மயானத்துக்குச் செல்லும் போதே, ஆற்றைக் கடந்தே செல்லவேண்டியதாக உள்ளதாகவும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
முள்ளிவட்டவான் கிராமத்தில் 45 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் வாழ்வாதாரத் தொழிலாக மீன்பிடி, விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.
இவ்விடத்தில் மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரிச் சென்றால் மண் அகழ்பவர்கள் அடிக்க வருவதாகவும், தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே, தமது பிரதேசத்தில் மணல் அகழ்வதைத் தடுத்து நிறுத்துவதுடன், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு, அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
42 minute ago