Editorial / 2023 மே 21 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த இருவரைக் கைது செய்துள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் மணலையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதான வீதியில் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (21) மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இச்சட்டவிரோத மணல் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் போதை வஸ்து ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சியாம் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த சட்டவிரோத நடவடிக்கையை முறியடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், வாகனங்களை பாரப்படுத்த உள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago