2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மணல் கடத்திய மூவர் கைது

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலவேளையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்கள், ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனரெனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மணல் ஏற்றி வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X