2025 மே 21, புதன்கிழமை

மண்முனை மேற்கில் ஏர் பூட்டு விழா

Editorial   / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தேசிய உணவு உற்பத்தி மறுலர்ச்சி வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வவுணதீவு பிரதேசத்தில்  ஏர் பூட்டு  விழா, நேற்று (06) கோலாகலமாக நடைபெற்றது.

விவசாய  உதவிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி, ஆயித்தியமலை விவசாய விரிவாக்கல் பிரிவிலுள்ள மணிபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஆரம்ப வைபவமாக சம்பிரதாய முறைப்படி ஏர் பூட்டி வயல் நிலம் உழும் வைபவமும் அதனையடுத்து உழவு இயந்திரத்தால் நிலத்தைப் பண்படுத்தும்  நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து விவசாயிகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விவசாய நெற்செய்கை, விவசாயிகளுக்கு திணைக்களங்களால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது.

இவ் விழாவின்போது மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன்,  விவசாய உதவிப் பணிப்பாளர்  செல்வி எம். சிவஞானம் மற்றும் விதை உற்பத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .