Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் பொறுப்பிலிருந்து சி.சிவராஜ (சுமன்) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், இன்று (23) தெரிவித்தார்.
12.04.2020 அன்று வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்ஸில் 28 மதுபானப் போத்தல்கள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
இதில் 04 ஆவது நபராக குற்றஞ்சாட்டப்பட்டதாக மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் சுமன் கைது செய்யப்பட்டமை அறியப்பட்டதற்கிணங்க இவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக, கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் தலைமையில் ஒழுக்காற்றுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்குழுவின் விசாரணைகள் வெளியிடப்படும் வரை பிரதேச அமைப்பாளர், கட்சியின் அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக சுமன் நிறுத்தப்பட்டுள்ளார் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago