2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மனித உரிமை பாதுகாப்பு சர்வதேசத்தால் வலுவுள்ளதாகும்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித் 

தமிழர்களின் மனித உரிமை தொடர்பான பாதுகாப்பு சர்வதேசத்தால் வலுவுள்ளதாக மாறும் என நம்புகின்றேன் என்று, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்  பத்மநாபா மன்றத்தின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவருமான  இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான அமைப்பினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களது  மனித உரிமைகள் எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.
 
“மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழு சிறப்பான முறையில் செயற்பட்டதன் காரணமாகவே, புலம்பெயர்ந்த நாடுகளின் பல நாடுகள் தமிழர்களுக்கு புகழிடம் வழங்கியதை மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

“குறிப்பிட்ட காலத்துக்கு முன் ஓரிருவர் இது தொடர்பாக செயற்பட்டாலும் புலம்பெயர் நாடுகள் குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கவில்லை. அவர்கள் புகழிடம் வழங்கினார்கள்.

“இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு விரலை நீட்டினாலும் அச் செயற்பாடு என்பது உண்மைக்கு மாறாக இருக்காது.

“ஆயுதப்போராட்டம் நடைபெற்ற பல நாடுகளிலும் பல தசாப்தங்களுக்கு மேலாக மனித உரிமைகள், செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமை அமைப்பினால் முடக்கி விடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

“எதிர்காலத்தில் தமிழர்களின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும் என நம்புகின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .