Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 26 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இனவாத, மதவாத அடிப்படையில் தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கேட்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு வழங்குவதற்கும் முன்வந்தால், நாட்டை அழிவில் இருந்து பாதுகாக்கலாம்” என, சிரேஷ்ட ஆய்வாளரும் சமூகவியல் பயிற்சியாளருமான ஹென்ரி டி மெல் தெரிவித்துள்ளார்.
“மட்டக்களப்பு, கிறீன் கார்டன் விடுதியில் நேற்று (25) இடம்பெற்ற சர்வ மதப் பேரவை உறுப்பினர்களின் கடந்த கால வேலைத்திட்டங்களின் மதிப்பீடு தொடர்பான ஆராய்வில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மதிப்பீட்டு ஆராய்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பல்வேறுபட்ட சமூக அமைப்புகளிலும் எல்லா மதங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்திருப்பது இனங்களுக்கிடையிலான இடைவெளிகளைக் குறைத்து சகவாழ்வைக் கட்டியெழுப்ப உதவும்.
“நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, இன நல்லிணக்கத்துக்காகவும் சகவாழ்வுக்காகவும் பிரதேசத்துக்குப் பொருத்தமான செயற்பாடுகளை அடையாளம் கண்டு செயலாற்றுவதுடன், கிடைக்கக் கூடிய உள்ளூர் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
“இந்த நாட்டில், எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த எத்தனையோ நல்லவர்கள் எவ்வளவோ நல்ல காரியங்களை பொதுவில் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவை வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்லை. ஆனால், வன்முறைகள்தான் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.
“நாட்டிலே இடம்பெறும் நல்ல விசயங்களுக்கும் தீய விசயங்களுக்கும் ஊடகங்களின் பங்கு உண்டு. இது ஊடக நிறுவனங்களின் நல்லொழுக்கங்கள், அந்த ஊடகங்களுக்காகப் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் நல்லொழுக்கங்கள், மனப்பான்மை, கண்ணோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
“நிலையான நீடித்த சமூக அமைதிக்காக நாம் எல்லோரும் இணைந்து ஒரே நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துக் கொண்டு பணியாற்றினால் இந்த நாடு உருப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
3 hours ago