2025 மே 21, புதன்கிழமை

மயானத்துக்கு அருகில் சேமகாலைக்குக் காணி

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில்,றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களது சடலங்களை அடக்கம் செய்வதற்கு, இந்து மயானத்துக்கு அருகில் ஒரு ஏக்கர் காணி வழங்குவதற்கு கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில்  வாகரைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், நேற்று (25) நடைபெற்றது.

வாகரைப் பிரதேசத்தில், றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களது சடலங்களை அடக்கம் செய்வதற்கு காணி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, உதவிப் பிரதேச செயலாளர் அருளானந்தம் அமலினி கூறினார்.

றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களது சடலங்களை அடக்கம் செய்வதற்கு வம்பிவட்டுவான் பகுதியில் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த காணியை வழங்குவதற்கு, அந்தப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், வாகரை இந்து மயானத்துக்கு அருகிலுள்ள ஒரு ஏக்கர் காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகரை இந்து மயானத்தின் காணி நிரம்பியதும், வேறு காணி வழங்க நடவடிக்கை யெடுக்கப்படும். குறித்த காணியின் ஒரு பகுதியை பொலிஸார் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பொலிஸார் விடுவிக்க வேண்டும். பொலிஸாருக்குப் பொருத்தமான காணி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .