2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மயிலவட்டுவான் பாலத்தை அமைக்க உடனடிப் பணிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலவட்டுவான் ஆற்றுக்கு மேலாக பாலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ளுமாறு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்ப்பாசன, பிரதேச செயலாளர்கள் அடங்கிய குழுவுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு பணித்தது.

2019ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று (25) நடைபெற்ற போது, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பிரதேச மக்கள், மயிலவட்டுவான் ஆற்றுக்கு மேலாகப் பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களில் இருவரை அழைத்து, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்த போதிலும், மயிலவட்டுவான் ஆற்றுக்கு மேலாகப் பாலம் அமைப்பது தொடர்பில், மத்திய, மாகாணத் திணைக்களம், வீதிப் போக்குவரத்து அதிகாரசபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் என எந்தவோர் அரச நிறுவனமும் முன்வரவில்லை.

இதன் காரணமாக, அனைத்துத் திணைக்களங்களையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதேசச் செயலாளர் ஆகியோர், குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து, பாலம் அமைப்பது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், அம்மக்களது பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X