2025 மே 01, வியாழக்கிழமை

மரக்குற்றிகளை கடத்திய கும்பல் சிக்கியது

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாகரை, வெள்ளாமைச்சேனை பகுதியில் கடத்தப்படவிருந்த ஒரு தொகை மரக்குற்றிகளை, வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று (28) ஒப்படைத்துள்ளனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாகரை காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு, மரக்குற்றிகள் கடத்தல் இடம்பெறுவதாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தவகவலையடுத்து, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில், நேற்று அதிகாலை அதிரடிப்படையினர் சுற்றிவலைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, நால்வர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் முதுரை, தேக்கை, கல்ஓதிய, கட்டாக்காலை உள்ளிட்ட 34 மரக்குற்றிகள், கெப் வாகனம், மோட்டார் சைக்கிள், கோடாரி, கத்தி என்பனவும் கைப்பற்றப்பட்டு, வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாக, வாழைச்சேனை விசேட அதிரடிப்படையின் அலுவலக அதிகாரி டபிள்யூ.ஏ.எஸ்.பிரேமரத்ன தெரிவித்தார்.

தென்னை ஓலைகளால் மறைத்து வைக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் ஓட்டமாவடிக்கு கொண்டு வருவதற்கு தயாரான நிலையில் இருந்தாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .