2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மரக்குற்றிகள் கடத்தல்; ஐவர் கைது

Editorial   / 2020 மே 22 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்குச் சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில், மரக்கூட்டுத்தாபன அனுமதிப்பத்திரத்தைச் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி, மரக்குற்றிகள் கடத்திலில் ஈடுபட்ட ஐவர், நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

6 அடி நீளமுடைய 41 தேக்கு மரக்குற்றிகளும், 07 முதுரை மரக்குற்றிகளும், வகுப்பு ஒன்றை சேர்ந்த 40 தேக்கு மரக்குற்றிகளும், வகுப்பு இரண்டைச் சேர்ந்த 100 தேக்கு மரக்குற்றிகளும் லொறி, மோட்டார் சைக்கிள், மரம் வெட்டும் இயந்திர வாள், 4 அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் வாழைச்சேனை / மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மரம் ஏற்றுவதற்கு பயன்படுத்திய லொறி இதற்கு முன்னரும் இரு தடவை சட்டவிரோத மரக்குற்றிகள் ஏற்றப்பட்டு, நீதிமன்றத்தினுடாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X