2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மரக்குற்றிகள் கடத்திய மூவருக்கு பிணை

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை வன திணைக்களத்துக்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகள் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் சரீரப் பிணையில் நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டனர்.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையில், வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தில் ஈடுபட்ட மேற்படி மூன்று சந்தேக நபர்களும் நேற்று (27)கைதுசெய்யப்பட்டதுடன், இரண்டு வாகனமும், 09 அடி நீளமுடைய 08 ஏழிலைப்பாலை மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X